ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்ட சிவன் கோவில் அகற்றம்


ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்ட சிவன் கோவில் அகற்றம்
x
தினத்தந்தி 28 Aug 2021 5:15 PM GMT (Updated: 2021-08-28T22:45:41+05:30)

திருச்செந்தூர் அருகே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்ட சிவன் கோவில் அகற்றப்பட்டது.

திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அருகே காந்திபுரத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக கூறி ஓலை செட்டில் அமைக்கப்பட்ட சிவன் கோவிலை வருவாய் துறையினர் அகற்றினர்.

கலெக்டரிடம் புகார்

திருச்செந்தூர் அருகே உள்ள காந்திபுரத்தில் கடந்த 6-ந் தேதி ஸ்ரீகுரு லிங்கேஸ்வரர் உடனுறை மங்களேஸ்வரி அம்மன் கோவில் ஓலை செட்டில் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இந்த கோவில் அமைக்கப்பட்ட இடம் தனிநபர்களுக்கு சொந்தமானதாகும். இந்த இடத்திற்கு உரிமையாளர்களான தூத்துக்குடியை சேர்ந்த சுதர்சனம் புனிதம் குடும்பத்தினர், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோவிலை அகற்றி தரும்படி மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தனர்.
அதன்படி ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோவிலை அகற்ற மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், வருவாய் துறையினருக்கு உத்தரவிட்டார். 

கோவில் அகற்றம்

இதையடுத்து திருச்செந்தூர் தாசில்தார் முருகேசன், மண்டல துணை தாசில்தார் பாலசுந்தரம், வருவாய் ஆய்வாளர் மணிகண்டவேல், கிராம நிர்வாக அலுவலர் செல்வலிங்கம் மற்றும் வருவாய் துறையினர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோவிலை அகற்றினர். 
தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணன், முத்து இருளன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து சிவன் மற்றும் நந்தி சிலைகள் முறைப்படி அர்ச்சகர் மூலம் பூஜை செய்யப்பட்டு அந்த இடத்தில் இருந்து அகற்றப்பட்டது. அதேபோல் அந்த இடத்தில் அமைக்கப்பட்டிருந்த ஓலை செட்டுகள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் அகற்றப்பட்டது.

Next Story