ஆரூர் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா ஊராட்சி முன்னாள் தலைவர் உள்பட 36 பேர் மீது வழக்கு


ஆரூர் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா ஊராட்சி முன்னாள் தலைவர் உள்பட 36 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 28 Aug 2021 10:52 PM IST (Updated: 28 Aug 2021 10:52 PM IST)
t-max-icont-min-icon

சங்கராபுரம் அருகே ஆரூர் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா ஊராட்சி முன்னாள் தலைவர் உள்பட 36 பேர் மீது வழக்கு


சங்கராபுரம்

சங்கராபுரம் அருகே ஆரூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் ஊர் மக்கள் சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பில் புதிதாக தேர் செய்யப்பட்டது. பின்னர் இதன் வெள்ளோட்டம் தேர் திருவிழாவாக நேற்று முன்தினம் நடைபெற்றது. 
முன்னதாக மங்கள வாத்தியம் இசைக்க வாழை, தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் மாரியம்மன் எழுந்தருளினார். பின்னர் ஊர் மக்கள் வடம்பிடித்து தேரை இழுத்தனர். தேர் அசைந்தாடியபடி முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
ஆனால் கொரோனா காலத்தில் எவ்வித அனுமதியும் இன்றி தேர்விழா நடத்திய ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ரவி உள்பட 36 பேர் மீது சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.



Next Story