தேசிய பணமாக்கல் திட்டத்தை கண்டித்து நெய்வேலியில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


தேசிய பணமாக்கல் திட்டத்தை கண்டித்து நெய்வேலியில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Aug 2021 11:00 PM IST (Updated: 28 Aug 2021 11:00 PM IST)
t-max-icont-min-icon

தேசிய பணமாக்கல் திட்டத்தை கண்டித்து நெய்வேலியில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நெய்வேலி, 

மத்திய நிதி அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள தேசிய பணமாக்கல் திட்டத்தின்கீழ் இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களான ரெயில்வே, மின்பகிர்மானம், மின் உற்பத்தி, விமான சேவை, துறைமுகம், சேமிப்பு கிடங்கு, தொலைத்தொடர்புத்துறை, 

சுரங்கம், நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் மதிப்பு பங்குகளை தனியாருக்கு தாரை வார்க்கும் திட்டமான தேசிய பணமாக்கும் திட்டத்தை அறித்துள்ளது.

இந்த திட்டத்தை கண்டித்து என்.எல்.சி. சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் நெய்வேலியில் பல்வேறு இடங்களில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


ஆர்ப்பாட்டம்

அதன்படி சுரங்கம் 1 நுழைவுவாயில் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தொழிற்சங்க தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார். இதேபோல் என்.எல்.சி. 2-வது சுரஙக்ம் முன்பு  தொழிற்சங்க பொருளாளர் சீனிவாசன் தலைமையிலும்,

 2-ம் அனல்மின்நிலையம் நுழைவு வாயில் முன்பு பொதுச் செயலாளர் ஜெயராமன் தலைமையிலும், என்.எஸ்.யூ. பகுதியில் துணைத்தலைவர் மணிமாறன் தலைமையிலும், சுரங்கம் 1 ஏ பகுதி நுழைவு வாயில் முன்பு  பகுதி தலைவர் புண்ணியமூர்த்தி தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது, தேசிய பணமாக்கல் திட்டத்தை அமல்படுத்தினால் ஏற்படும் பொருளாதார இழப்புகள் குறித்து அனைத்து பகுதிகளிலும் துண்டுப்பிரசுரம் வினியோகிக்கப்பட்டது.

Next Story