ஆலங்காயம் அருகே; 14 வயது சிறுமியை கர்ப்பிணியாக்கியவர் கைது
ஆலங்காயம் அருகே 14 வயது சிறுமியை காதல் திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபரை ‘போக்சோ’ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
வாணியம்பாடி
ஆலங்காயம் அருகே 14 வயது சிறுமியை காதல் திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபரை ‘போக்சோ’ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
2 வருடமாக காதலித்தார்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த ஆலங்காயம் நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் பலராமன். இவரது மகன் கார்த்திக் (வயது 30) தனது உறவினரின் 14 வயது மகளை திருமணம் செய்து கொள்வதாக கூறி 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
அந்த சிறுமியை அவர் திருமணமும் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சிறுமி கர்ப்பமானாள். அரசு சலுகை பெறுவதற்காக ஆலங்காயம் பகுதியிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனைக்காக சிறுமியை கார்த்திக் அழைத்து சென்றுள்ளார்.
மகளிர் போலீசில் புகார்
டாக்டர்கள் பரிசோதித்தபோது 14 வயதே நிரம்பிய அந்த சிறுமி கருவுற்றிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து அவர்கள் அளித்த தகவலின்பேரில் ஊர் நல அலுவலர் வைஜெயந்தி அங்கு வந்து சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டார்.
அதில் சிறுமியை கார்த்திக் குழந்தை திருமணம் செய்து கர்ப்பிணியியாக்கியது தெரியவந்தது.
‘போக்சோ’ சட்டத்தில் கைது
இது குறித்து கார்த்திக் மீது வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஊர்நல அலுவலர் வைஜெயந்தி புகார் அளித்தார்.
அதன்பேரில் கார்த்திக் மீது ‘போக்சோ’ மற்றும் குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை மகளிர் போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story