திருப்பத்தூரில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்


திருப்பத்தூரில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 28 Aug 2021 5:53 PM GMT (Updated: 28 Aug 2021 5:53 PM GMT)

திருப்பத்தூரில் குடிநீர் கேட்டு பொதுமக்கள சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் டவுன் 9-வது வார்டு ஜின்னா ரோடு 3-வது தெரு பகுதியில் பல மாதங்களாக குடிநீர் வழங்கப்படவில்லை என்று நகராட்சி மீது அந்த பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர். 

இந்த நிலையில் குடிநீர் வழங்காததை கண்டித்து திருப்பத்தூர் பெரிய கடைத்தெரு நகைக்கடை பஜார் கூட்ரோடு பகுதியில ்கே.ஆர்.ரபிகான் தலைமையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த திருப்பத்தூர் நகராட்சி ஆணையாளர் பி. நாகராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தலிங்கம் அங்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அப்போது அப்பகுதி மக்கள் தங்களுக்கு உடனடியாக குடிநீர் வழங்க வேண்டும். கால்வாய்களை தூர் வார வேண்டும். வீடு, கடைகள் மீது கருங்கல் பலகை போட்டு கால்வாயை மூடி உள்ளதால் மழை பெய்தால் கழிவுநீர் வீட்டிற்குள் புகுந்து விடுகிறது. எனவே இதனை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

நகராட்சி ஆணையாளர் பி.ஏகராஜ் பதில் அளிக்கையில் 10 பேர் கொண்ட குழு அமைத்து உடனடியாக அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்படும். 

ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்தார். இதனை ஏற்று அந்த பகுதி பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

 இந்த மறியலால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Next Story