விளை நிலங்களுக்குள் புகுந்த காட்டுயானைகளால் நெற்பயிர் சேதம்


விளை நிலங்களுக்குள் புகுந்த காட்டுயானைகளால் நெற்பயிர் சேதம்
x
தினத்தந்தி 28 Aug 2021 11:44 PM IST (Updated: 28 Aug 2021 11:44 PM IST)
t-max-icont-min-icon

குடியாத்தம் அருகே விளைநிலங்களுக்குள் புகுந்த காட்டுயானைகளால் நெற்பயிர்கள் சேதமாயின.

குடியாத்தம்
குடியாத்தம் அருகே விளைநிலங்களுக்குள் புகுந்த காட்டுயானைகளால் நெற்பயிர்கள் சேதமாயின.

குடியாத்தத்தை அடுத்த ஆந்திர எல்லையில் உள்ள வனப்பகுதியில் ஏராளமான காட்டுயானைகள் முகாமிட்டு, அடிக்கடி தமிழக எல்லையில் உள்ள வேளாண் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. அதேபோல் நேற்று முன்தினம் நள்ளிரவு குடியாத்தத்தை அடுத்த தனகொண்டபல்லி கிராமத்தையொட்டியபடி உள்ள விளை நிலங்களுக்குள் 2 காட்டுயானைகள் புகுந்து ெநற்பயிரை மிதித்து ேசதப்படுத்தின. 

இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் வனச்சரக அலுவலர் சரவணபாபு தலைமையில் விரைந்து வந்த வனத்துறையினர் காட்டு யானைகளை பட்டாசு வெடித்தும், மேளம் அடித்தும் காட்டுப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.


Next Story