அரசின் சட்டத்தை மதித்து மாணவ மாணவிகளுக்கு தனியார் தொழில் நிறுவனங்கள் வேலைவாய்ப்பை வழங்க கலெக்டர் அறிவுறுத்தல்


அரசின் சட்டத்தை மதித்து மாணவ மாணவிகளுக்கு தனியார் தொழில் நிறுவனங்கள் வேலைவாய்ப்பை வழங்க கலெக்டர் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 29 Aug 2021 12:33 AM IST (Updated: 29 Aug 2021 12:33 AM IST)
t-max-icont-min-icon

படித்து வெளியேறும் மாணவ, மாணவிகளுக்கு அரவசின் சட்டத்தை மதித்து தனியார் நிறுவனங்கள் வேலை வாய்ப்பை வழங்க வேண்டும் என ராணிப்பேட்டை கலெக்டர் அறிவுறுத்தினார்.

சிப்காட் (ராணிப்பேட்டை)
படித்து வெளியேறும் மாணவ, மாணவிகளுக்கு அரவசின் சட்டத்தை மதித்து தனியார் நிறுவனங்கள் வேலை வாய்ப்பை வழங்க வேண்டும் என ராணிப்பேட்டை கலெக்டர் அறிவுறுத்தினார்.

 படித்த இளைஞர்களுக்கு மத்திய அரசின் சட்டத்தின்படி கட்டாயம் தொழிற்பயிற்சி வேலைகளை வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தில் நடந்தது. மாவட்ட திறன் பயிற்சி மையம் சார்பில் நடந்த இந்த கூட்டத்தில் தனியார் தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டன.

கூட்டத்துக்கு கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமை தாங்கி பேசியதாவது :-

தமிழ்நாடு திறன் பயிற்சி மேம்பாட்டு நிறுவனத்தால் தொழிற்பயிற்சி கல்விகள் நடத்தப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் கட்டாய தொழிற்பயிற்சி சட்டத்தின் அடிப்படையில், அனைத்து தனியார் தொழில் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் மொத்தமுள்ள பணியாளர்களில் 10 முதல் 15 சதவீதம் தொழிற்கல்வி பயின்ற மாணவ மாணவிகளுக்கு தொழிற்பயிற்சி வேலை வாய்ப்பை வழங்க வேண்டும். இந்த நடைமுறையினை ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனைத்து தனியார் தொழில் நிறுவனங்கள் கட்டாயம் செயல்படுத்திட வேண்டும்.
தொழிற் பயிற்சியில் சேர்ந்திடும் மாணவர்கள், நிறுவனங்களில் தொடர்ந்து பணியில் இருப்பதில்லை என நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு காரணம் ஊதியம் குறைவாக உள்ளது என மாணவர்கள் கூறுகின்றனர். இந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண தனியார் தொழில் நிறுவனங்கள் சம்பளத்தை உயர்த்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அரசு மற்றும் தனியார் தொழில் கல்வி நிறுவனங்கள் வாயிலாக திறன் படைத்த மாணவ -மாணவிகள் ஆண்டுதோறும் வெளியில் வருகின்றனர். திறமை உள்ளவர்களுக்கு வாய்ப்பளித்து அவர்களும் வளரவேண்டும், நிறுவனமும் லாபம் ஈட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் தொழிலக பாதுகாப்பு இணை இயக்குனர் முகமது கனி, திறன் பயிற்சி மைய உதவி இயக்குனர் சீனிவாசன், பெல் நிறுவன மனிதவள மேலாளர் ஜாய் மற்றும் தனியார் நிறுவன மனிதவள மேலாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story