வாகனத்தில் அடிபட்டு குட்டியுடன் குரங்கு செத்தது
வாகனத்தில் அடிபட்டு குரங்கும், குட்டியும் செத்தன.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட வனப்பகுதிகளில் இருந்து வனவிலங்குகள் தண்ணீர் தேடி கிராம பகுதிகளுக்குள் வருவது வழக்கம். இதில் மான் போன்ற விலங்குகள் கிராம பகுதிக்கு வரும்போது நாய்கள் கடித்தும், வாகனங்களில் அடிபட்டும் உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. மேலும் வனப்பகுதியில் இருந்து வந்த குரங்குகள் பெரம்பலூர் உள்பட பல்வேறு பகுதிகளில் சுற்றித்திரிகின்றன. இதில் சில தாய் குரங்குகள், குட்டிகளை உடலில் சுமந்தவாறு காணப்படுகின்றன. இந்நிலையில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே வாலிகண்டபுரத்தில் நேற்று மதியம் ஒரு குரங்கு தனது குட்டியுடன் சாலையை கடந்து சென்றது. அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் குரங்கும், குட்டியும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தன. இதனை கண்ட ரோந்து போலீசார், உயிரிழந்த குரங்கு மற்றும் குட்டியை கைப்பற்றி, அப்பகுதியில் குழி தோண்டி புதைத்தனர்.
Related Tags :
Next Story