பெண் உள்பட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


பெண் உள்பட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 28 Aug 2021 7:47 PM GMT (Updated: 2021-08-29T01:17:25+05:30)

வெவ்வேறு குற்ற சம்பவங்களில் கைதான பெண் உள்பட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

வரதராஜன்பேட்டை:

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியில் தொடர்ந்து கட்டப்பஞ்சாயத்து சம்பவத்தில் ஈடுபட்டு வந்த புதுச்சாவடி கிராமத்தை சேர்ந்த ராஜசேகர் மற்றும் உரிய அனுமதியின்றி கருக்கலைப்பு செய்து பெண் சாவு வழக்கில் கைதான கொங்குநாட்டார் குப்பம் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணவேணி, மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டு வந்த இடையக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த புரட்சித்தமிழன் ஆகிய 3 ேபரும் ேபாலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தொடர்ந்து குற்றச் சம்பவங்களில் இவர்கள் ஈடுபட்டு வருவதால் 3 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா, மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
இதையடுத்து அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி, குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

Next Story