குளத்தில் மூழ்கி வாலிபர் சாவு


குளத்தில் மூழ்கி வாலிபர் சாவு
x
தினத்தந்தி 28 Aug 2021 7:54 PM GMT (Updated: 2021-08-29T01:24:25+05:30)

பாளையங்கோட்டையில் குளத்தில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

நெல்லை:
பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 34). வெளிநாட்டில் வேலை செய்து வந்த இவர் தற்போது ஊருக்கு வந்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை அரியகுளம் பகுதியில் உள்ள ஒரு குளத்துக்கு குளிக்கச் சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் ஆழமான பகுதிக்கு சென்று மூழ்கினார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனாலும் தினேஷ்குமார் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story