ஆலங்குளத்தில் 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


ஆலங்குளத்தில் 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 29 Aug 2021 2:50 AM IST (Updated: 29 Aug 2021 2:50 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குளத்தில் காரில் கடத்திய 2 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஆலங்குளம்:
ஆலங்குளம் மங்கம்மாள் சாலையில் ஆலங்குளம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரில் இருந்த 2 பேர் காரை நிறுத்திவிட்டு தப்பி சென்றனர். போலீசார் அந்த காரை சோதனை செய்ததில் அதில் 2 டன் ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து ரேஷன் அரிசி, காரை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடியவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.



Next Story