டாஸ்மாக் கடைகள் 1-ந்தேதி அடைப்பு


டாஸ்மாக் கடைகள் 1-ந்தேதி அடைப்பு
x
தினத்தந்தி 28 Aug 2021 9:29 PM GMT (Updated: 2021-08-29T10:18:58+05:30)

சங்கரன்கோவில், புளியங்குடி, வாசுதேவநல்லூர் பகுதியில் டாஸ்மாக் கடைகள் 1-ந் தேதி அடைக்கப்படும் என்று தென்காசி கலெக்டர் கோபால சுந்தரராஜ் தெரிவித்து உள்ளார்.

தென்காசி:
தென்காசி கலெக்டர் கோபால சுந்தரராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:- 
தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா நெற்கட்டும்செவல் கிராமத்தில் வருகிற 1-ந் தேதி (புதன்கிழமை) சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவன் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு சட்டம்-ஒழுங்கை மேற்கொள்ளும் வகையில் சங்கரன்கோவில் திருவேங்கடம் ரோடு, ெரயில்வே பீடர் ரோடு, சுரண்டை ரோடு, தெற்கு ரத வீதி, ராஜபாளையம் ரோடு, ரத்தினபுரி, புளியங்குடி பாம்புக்கோவில் சந்தை ரோடு, டி.என்.புதுக்குடி, வாசுதேவநல்லூர், தேவிபட்டினம் ஆகிய பகுதிகளில் உள்ள 13 டாஸ்மாக் கடைகளை அன்று காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

இந்த நாளில் மதுபான விற்பனை, மதுபானத்தை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல், பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்க சட்டத்தின்கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story