பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க குமரி வீராங்கனை தகுதி
போலந்தில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச போட்டியில் குமரி வீராங்கனை 7-வது இடம் பெற்றார். இதன்மூலம் அவர் அடுத்து நடைபெறும் பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றார்.
அருமனை:
போலந்தில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச போட்டியில் குமரி வீராங்கனை 7-வது இடம் பெற்றார். இதன்மூலம் அவர் அடுத்து நடைபெறும் பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றார்.
குமரி வீராங்கனை
குமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள கடையாலுமூடு பகுதியை சேர்ந்தவர் முஜீப். ஓட்டல் தொழிலாளி. இவரது மகள் ஷமீகா பர்வின் (வயது7). இவர் 7 வயதில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கேட்கும் திறனையும், பேசும் திறனையும் இழந்தார். ஆனால், மனம் தளராத ஷமீகா பர்வின் தேசிய அளவில் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் போன்ற தடகள போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசுகளை வாங்கி குவித்தார்.
போலந்தில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச போட்டியில் பங்கேற்பதற்கான தகுதி போட்டிகள் கடந்த மாதம் டெல்லியில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஷமீகா பர்வின் பங்கேற்று வெற்றி பெற்றார். இருப்பினும் போலாந்து நாட்டிற்கு அழைத்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.
இதனால் சமீரா பர்வின் சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. கோர்ட்டு உத்தரவுப்படி போலந்து நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
7-வது இடம்
போலந்து நாட்டில் நேற்று முன்தினம் நடந்த நீளம் தாண்டுதல் போட்டியில் ஷமீகா பர்வின் கலந்து கொண்டார். இதை கடையாலுமூட்டில் உள்ள ஊர் மக்கள் பெரிய திரை அமைத்து கூடி இருந்து கண்டு களித்தனர். போட்டியில் ஷமீகா பர்வின் 7-வது இடம் பெற்றார். இந்த போட்டியில் முதல் 8 இடங்களை பெறுகிறவர்கள் அடுத்து நடைபெறும் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில் அந்தந்த நாடுகள் சார்பில் கலந்து கொள்வார்கள் என்ற விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் குமரி வீராங்கனை வருகிற 2024-ம் ஆண்டு பாரீஸ் நகரில் நடைபெறும் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொள்ள தகுதி பெற்றார். இதையடுத்து ஊர் மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
Related Tags :
Next Story