கெங்கவல்லி போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
கெங்கவல்லி போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தது.
கெங்கவல்லி:
கெங்கவல்லி அருகே உள்ள ஆணையம்பட்டி பகுதியை சேர்ந்த குணசேகரன் மகன் மணிபாரதி (வயது 26). இவர் அங்கு ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். கடம்பூர் காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்த பெரியசாமி மகள் கவுசல்யா (23). இவர் 10-ம் வகுப்பு படித்து விட்டு, அதே கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இதன் மூலம் ஏற்பட்ட பழக்கத்தால் மணிபாரதியும், கவுசல்யாவும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால், 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி பெரம்பலூர் அருகே உள்ள கைகளத்தூர் மாரியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் பாதுகாப்பு கேட்டு கெங்கவல்லி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் 2 பேரின் பெற்றோர்களையும் அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் மணிபாரதியுடன், கவுசல்யாவை அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story