மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் குன்னூர் வருகை


மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் குன்னூர் வருகை
x
தினத்தந்தி 29 Aug 2021 2:39 PM IST (Updated: 29 Aug 2021 2:39 PM IST)
t-max-icont-min-icon

வெலிங்டன் ராணுவ கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்க மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் நேற்று குன்னூர் வந்தார். அவரை கலெக்டர் மற்றும் ராணுவ அதிகாரிகள் வரவேற்றனர்.

ஊட்டி

வெலிங்டன் ராணுவ கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்க மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் நேற்று குன்னூர் வந்தார். அவரை கலெக்டர் மற்றும் ராணுவ அதிகாரிகள் வரவேற்றனர்.

அதிநவீன ரோந்து கப்பல்

இந்திய கடலோர காவல்படைக்கு ‘விக்ரஹா’ என்ற அதிநவீன ரோந்து கப்பல் தயார் செய்யப்பட்டது. இதனை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி, சென்னை துறைமுகத்தில் நேற்று நடந்தது. இதில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் கலந்துகொண்டு அந்த கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

பின்னர் அங்கிருந்து தனி விமானம் மூலம் கோவையில் உள்ள சூலூர் விமானப்படை தளத்துக்கு மதியம் 12.20 மணிக்கு வந்தார். அவரை கோவை மாவட்ட கலெக்டர் சமீரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரத்தினம் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் 12.59 மணிக்கு கார் மூலம் குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவ கல்லூரிக்கு புறப்பட்டு சென்றார். 

ராஜ்நாத்சிங் வருகை

மேட்டுப்பாளையம்- கோத்தகிரி வழியாக மாலை 3.30 மணிக்கு குன்னூர் வந்தடைந்தார். அவரை ராணுவ தளபதி நரவானே, கல்லூரி லெப்டினன்ட் ஜெனரல் கலோன், உயர் அதிகாரிகள் வரவேற்றனர். நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா புத்தகம் வழங்கி வரவேற்றார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி உடனிருந்தார். தொடர்ந்து ராணுவ கல்லூரியிலேயே ராஜ்நாத்சிங் தங்கி இருந்தார். அவருடன் 14 உயர் ராணுவ அதிகாரிகள் வந்து உள்ளனர். 

கலந்துரையாடல் நிகழ்ச்சி

இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு வெலிங்டன் ராணுவ கல்லூரியில் பயிற்சி பெற்று வரும் முப்படை அதிகாரிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் கலந்துகொண்டு இந்தியா மற்றும் நட்பு நாடுகளை சேர்ந்த முப்படை அதிகாரிகளுடன் கலந்துரையாடுகிறார். அதைத்தொடர்ந்து மதியம் 2 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் கோவை செல்கிறார். தொடர்ந்து அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார்.

மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் வருகையையொட்டி குன்னூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. வெலிங்டன் பகுதியில் பாதுகாப்பு கருதி 2 நாட்கள் கடைகளை திறக்கக்கூடாது என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.


Next Story