ரேஷன் கடையை உடைத்து காட்டுயானைகள் அட்டகாசம்


ரேஷன் கடையை உடைத்து காட்டுயானைகள் அட்டகாசம்
x
தினத்தந்தி 29 Aug 2021 2:39 PM IST (Updated: 29 Aug 2021 2:39 PM IST)
t-max-icont-min-icon

பந்தலூர் அருகே ரேஷன் கடையை உடைத்து காட்டுயானைகள் அட்டகாசம் செய்தன.

பந்தலூர்

பந்தலூர் அருகே ரேஷன் கடையை உடைத்து காட்டுயானைகள் அட்டகாசம் செய்தன.

5 காட்டுயானைகள் முகாம்

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட நெலாக்கோட்டை அருகே உள்ள ராக்வுட் தேயிலை தோட்ட பகுதியில் ஏராளமான தொழிலாளர்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த பகுதியில் காட்டுயானைகள் அடிக்கடி புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. குடியிருப்புகளை சேதப்படுத்துவதோடு சாலையில் செல்பவர்களை துரத்துவதால் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ராக்வுட் பகுதியில் 5 காட்டுயானைகள் முகாமிட்டு வந்தன. அந்த காட்டுயானைகள் ரேஷன் கடை கதவை உடைத்து அட்டகாசம் செய்தன. மேலும் கடைக்குள் இருந்த சர்க்கரை, அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களை தின்றும், மூட்டைகளை வெளியே தூக்கி வீசியும் சேதப்படுத்தின.

வனத்துறையினர் விரட்டினர்

பின்னர் தொழிலாளர்களின் குடியிருப்புகளை முற்றுகையிட்டன. இதனால் தொழிலாளர்கள் பீதி அடைந்தனர். இதுகுறித்து பிதிர்காடு வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் பிதிர்காடு வனச்சரகர் மனோகரன் மற்றும் வனத்துறையினர் நேரில் வந்து காட்டுயானைகளை விரட்டியடித்தனர்.
மேலும் காட்டுயானைகளால் சேதம் அடைந்த ரேஷன் கடையை பந்தலூர் வட்ட வழங்கல் அலுவலர் பொதிகைநாதன் பார்வையிட்டார். 

இது தவிர அந்த காட்டுயானைகள் அடர்ந்த வனப்பகுதிக்குள் செல்லாமல், அந்த பகுதியில் உள்ள வனப்பகுதியில் முகாமிட்டு உள்ளது. இதனால் மீண்டும் குடியிருப்பு பகுதிக்குள் நுழையாமல் தடுக்க வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.


Next Story