டாக்டர்கள், நர்சுகளுக்கு தமிழக அரசு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும்-ஓசூரில் நடிகர் சுமன் பேட்டி


டாக்டர்கள், நர்சுகளுக்கு தமிழக அரசு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும்-ஓசூரில் நடிகர் சுமன் பேட்டி
x
தினத்தந்தி 29 Aug 2021 9:09 AM GMT (Updated: 2021-08-29T14:39:43+05:30)

டாக்டர்கள், நர்சுகளுக்கு தமிழக அரசு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும்

ஓசூர்:
பிரபல வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகரான சுமன், ஓசூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா பெருந்தொற்று காலங்களில், களத்தில் இறங்கி உயிரை பொருட்படுத்தாமல் பணியாற்றிய டாக்டர்கள், நர்சுகளுக்கு தமிழக அரசு உரிய முறையில் அங்கீகாரம் வழங்க வேண்டும். அவர்களுக்கு பொருளாதாரம், கல்வி உள்ளிட்டவைகளில் முன்னுரிமை வழங்க வேண்டும். உலகிற்கு உணவை உற்பத்தி செய்யும் விவசாயிகள், பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகிறார்கள். அவர்களின் நலனை கருத்தில் கொண்டு, உண்மையான விவசாயிகளுக்கு அரசு இலவச மின்சாரம் வழங்க வேண்டும். நடிகர்கள் அவர்களை பின்தொடரும் ரசிகர்கள், அவரவர் பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை செய்ய முன்வர வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார். 
மேலும் சுமன் தனது பிறந்தநாளையொட்டி கேக் வெட்டி கொண்டாடினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.

Next Story