ஏரியூர் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை
ஏரியூர் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஏரியூர்:
ஏரியூர் அண்ணா நகரை சேர்ந்தவர் சந்திரன். இவர் கர்நாடகாவில் கல்குவாரியில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பழனியம்மாள் (வயது40). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் குடும்பத்தகராறு காரணமாக, நேற்று காலை பழனியம்மாள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஏரியூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பழனியம்மாள் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story