வாடகைதாரர்கள் குறித்த விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்; வீட்டு உரிமையாளர்களுக்கு போலீஸ் கமிஷனர் அறிவுறுத்தல்


வாடகைதாரர்கள் குறித்த விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்; வீட்டு உரிமையாளர்களுக்கு போலீஸ் கமிஷனர் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 29 Aug 2021 3:37 PM IST (Updated: 29 Aug 2021 3:37 PM IST)
t-max-icont-min-icon

பாதுகாப்பு மற்றும் குற்ற தடுப்பு நடவடிக்கையாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்பேரில், வீட்டு உரிமையாளர்கள் தங்களது வீட்டில் வாடகைக்கு குடியிருப்போரின் விவரங்களை தங்கள் பகுதி எல்லைக்குட்பட்ட போலீஸ் நிலையத்தில் தெரியப்படுத்த வேண்டும் என்ற உத்தரவு ஏற்கனவே அமலில் இருந்து வருகிறது.

இந்தநிலையில் சென்னையில் உள்ள வீட்டு உரிமையாளர்கள் தங்கள் வீட்டில் வாடகைக்கு வசிப்போரின் விவரங்களை வருகிற அக்டோபர் 26-ந்தேதிக்குள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

மேற்கண்ட உத்தரவை சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பிறப்பித்துள்ளார்.

Next Story