திருவான்மியூர் கடலில் குளித்த கல்லூரி மாணவர் மாயம்
சென்னை பழவந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் மேத்யூ (வயது 18). இவர் அதே பகுதியில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை தனது நண்பர்கள் பெண்ஸ்டன் உள்பட 4 பேருடன் திருவான்மியூர் கடற்கரைக்கு வந்துள்ளார்.
அங்கு நண்பர்கள் அனைவரும் கடலில் இறங்கி குதூகலமாக குளித்து கொண்டிருந்தனர். அப்போது கடலில் ஏற்பட்ட ராட்சத அலை, மேத்யூ மற்றும் அவரது நண்பர் பெண்ஸ்டன் ஆகிய இருவரையும் உள்ளே இழுத்து சென்று விட்டது. இதில் பெண்ஸ்டன் தட்டி தடுமாறி கரைக்கு வந்து சேர்ந்து விட்டார். ஆனால், மேத்யூ கடலில் மாயமாகியுள்ளார். இதுகுறித்த தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் மாயமான கல்லூரி மாணவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து திருவான்மியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே 5 நாட்களுக்கு முன்பு சென்னை மெரினா கடலில் குளித்து கொண்டிருந்த போது மாயமான 3 மாணவர்களை மெரினா போலீசாரும், கடலோர காவல் படையும் தேடி வருவது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story