வேப்பேரியில் சட்டவிரோதமாக இயங்கிய ‘ஹூக்கா பார்’; ஊழியர்கள் கைது
தினத்தந்தி 29 Aug 2021 3:53 PM IST (Updated: 29 Aug 2021 3:53 PM IST)
Text Sizeசென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் அமைந்துள்ள வேப்பேரி ஈ.வி.கே.சம்பத் சாலையில் உள்ள குடியிருப்பில் ‘சுனோக்கர்ஸ்‘ விளையாட்டு போர்வையில் சட்டவிரோதமாக ‘ஹூக்கா பார்‘ செயல்பட்டு வருவதாக வேப்பேரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் நடத்திய சோதனையில் அங்கு ‘ஹூக்கா பார்’ இயங்குவது தெரிய வந்தது. இதையடுத்து அங்கு பணியில் இருந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த ஜாகேஷ்வர் ராய் (வயது 30) உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். ஹூக்கா ஜாடிகள், குழாய்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த பாரை நடத்தி வந்த சவுகார்ப்பேட்டையை சேர்ந்த பரோஸ் தலைமறைவாகிவிட்டார்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire