கொரோனா தடுப்பூசி


கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 29 Aug 2021 4:14 PM IST (Updated: 29 Aug 2021 4:14 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாநகரில் 34 இடங்களில் 22 ஆயிரத்து 100 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதனை மாநகராட்சி கமிஷனர் ஆய்வு செய்தார்.

திருப்பூர்
திருப்பூர் மாநகரில் 34 இடங்களில் 22 ஆயிரத்து 100 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதனை மாநகராட்சி கமிஷனர் ஆய்வு செய்தார். 
தடுப்பூசி முகாம் 
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் 16ந் தேதியில் இருந்து கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மாநகரில் பனியன் நிறுவன தொழிலாளர்கள் லட்சக்கணக்கானவர்கள் வசித்து வருகிறார்கள். மாநகரில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 
மாநகர் பகுதிகளில் கணக்கெடுத்து சுழற்சி முறையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி குறைவாக செலுத்தியவர்கள் இருக்கும் பகுதிகளில் கூடுதலாக தடுப்பூசி முகாமும் நடத்தப்பட்டு வருகிறது. 
மாநகராட்சி கமிஷனர் ஆய்வு 
அந்த வகையில் விடுமுறை தினமான நேற்று மாநகரில் அதிகளவில் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி மாநகர் பகுதிகளில் 34 இடங்களில் நடந்த தடுப்பூசி முகாமில் 22 ஆயிரத்து 100 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை இந்த தடுப்பூசி முகாம் நடந்தது. 
இந்நிலையில் மாநகராட்சி 1வது மண்டலத்திற்கு உட்பட்ட குமார்நகர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மற்றும் 2வது மண்டலத்திற்கு உட்பட்ட பிச்சம்பாளையம்புதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடந்த தடுப்பூசி முகாமை மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் பாடி ஆய்வு செய்தார். தடுப்பூசி போடும் பணிகளையும் அவர் பார்வையிட்டார். 
------

----
------


Next Story