கோவில்பட்டியில் ரூ.1½ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் டீக்கடைக்காரர் கைது
ரூ.1½ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் டீக்கடைக்காரர் கைது
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் ரூ.1½லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பதுக்கிய டீக்கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.
போலீசார் அதிரடி சோதனை
கோவில்பட்டி ராஜிவ் நகர் 3-வது குறுக்குத்தெரு பகுதியில் உள்ள வீட்டுக்கு முன்பு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப் பட்டுள்ளதாக மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு உதயசூரியன் ஆலோசனையில் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணா மற்றும் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
ரூ.1½லட்சம் புகையிலை பறிமுதல்
அப்போது அங்கு கிருஷ்ணசாமி மகன் ஜோதி (வயது 40) என்பவர் வீட்டு முன்பு 8 மூட்டைகளின் தடைசெய்யப் பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கு வைக்கப்பட்டு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து புகையிலை மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
டீக்கடைக்காரர் கைது
இவற்றை பதுக்கி வைத்திருந்த ஜோதியை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அவர், கோவில்பட்டி- பசுவந்தனை சாலையில் டீக்கடை நடத்தி வருவதும், விற்பனை செய்யும் நோக்கில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது. பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.1½ லட்சம் ஆகும். இது குறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜோதியை கைது செய்தனர்.
Related Tags :
Next Story