திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு


திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு
x
தினத்தந்தி 29 Aug 2021 5:53 PM IST (Updated: 29 Aug 2021 5:53 PM IST)
t-max-icont-min-icon

முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட சீரிய நடவடிக்கையின் காரணமாக தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. இந்தநிலையில் வருகிற 1-ந்் தேதி முதல் தமிழகத்தில் 9,10, 11,12 மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிகள் திறப்பதற்கு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. பள்ளிகள் திறப்பு முன்னேற்பாடு பணிகளை நேற்று திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆறுமுகம், கடம்பத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் பள்ளி வளாகத்தில் வளர்ந்திருந்த முட்செடிகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றி சீர்செய்வதையும், பள்ளி கட்டிடத்தின் மேல் வளர்ந்திருந்த செடிகள் மற்றும் கொடிகளை அகற்றுவதையும் பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது மாவட்ட கல்வி அலுவலர் புண்ணியகோட்டி, பள்ளி தலைமை ஆசிரியர் ரேவதி, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் நிறுவனர் அருணன், கடம்பத்தூர் முதல்நிலை ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி ரமேஷ், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பூபாலன், கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராம்குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Next Story