விவசாய பயன்பாட்டிற்கு 42 டன் உரம் வினியோகம்
காங்கேயம் நகராட்சிக்கு சொந்தமான உரக்கிடங்கு மையத்தில் இருந்து விவசாய பயன்பாட்டிற்கு 42 டன் உரம் வினியோகம் செய்யப்பட்டது.
காங்கேயம்
காங்கேயம் நகராட்சிக்கு சொந்தமான உரக்கிடங்கு மையத்தில் இருந்து விவசாய பயன்பாட்டிற்கு 42 டன் உரம் வினியோகம் செய்யப்பட்டது.
இதுகுறித்து காங்கேயம் நகராட்சி ஆணையாளர் எம்.முத்துக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது
தரம் பிரிப்பு
காங்கேயம் நகராட்சிக்குட்பட்ட குடியிருப்புகள் மற்றும் உணவகங்கள், தினசரி மார்க்கெட் ஆகிய பகுதிகளில் இருந்து தினசரி சேகரிக்கப்படும் மக்கும் கழிவுகளான காய்கறிகள், வாழை இலை, பாக்கு மட்டை தட்டு, கீரை வகைகள், முட்டை ஓடு, பழங்கள், தேங்காய் சிரட்டைகள், மற்றும் இதர உலர் கழிவுகளை தனியாக தரம் பிரித்து சேகரிக்கப்படுகிறது.
அதனை நகராட்சிக்கு சொந்தமான சென்னிமலை சாலையில் அமைந்துள்ள உரக்கிடங்கு மையத்திற்கு கொண்டு சென்று அதற்கு பயன்படுத்தப்படும் இயந்திரத்தின் மூலம் சிறு துண்டுகளாக அரைத்து உரம் தயார் செய்யப்படுகிறது.
42 டன் உரம்
இவ்வாறு தாயாரிக்கப்பட்ட உரத்தினை விவசாய பயன்பாட்டிற்காக காங்கேயம் அருகே உள்ள ஆலாம்பாளையம் பகுதியை சேர்ந்த வெள்ளியங்கிரி என்ற விவசாயி தனது தோட்டத்திற்கு உரம் தேவை என தெரிவித்ததின் பேரில் விவசாய பயன்பாட்டிற்காக தனியார் வாகனங்கள் மூலம் சுமார் 42 டன் உரம் வழங்கப்பட்டது.
அப்போது துப்புரவு ஆய்வாளர் செல்வராஜ், துப்புரவு மேற்பார்வையாளர் ஈஸ்வரன், சாமுவேல் மற்றும் தூய்மை பணியாளர்கள் உடன் இருந்தனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story