முன்கள பணியாளர்களுக்கு அரசு அறிவித்த ஊக்கத்தொகையை உடனே வழங்க வேண்டும் சங்க பேரவை கூட்டத்தில் தீர்மானம்


முன்கள பணியாளர்களுக்கு அரசு அறிவித்த ஊக்கத்தொகையை உடனே வழங்க வேண்டும் சங்க பேரவை கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 29 Aug 2021 7:12 PM IST (Updated: 29 Aug 2021 7:12 PM IST)
t-max-icont-min-icon

முன்கள பணியாளர்களுக்கு அரசு அறிவித்த ஊக்கத்தொகையை உடனே வழங்க வேண்டும் என்று சங்க பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


திண்டுக்கல்:
திண்டுக்கல் பேகம்பூரில் உள்ள தனியார் மண்டபத்தில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கத்தின் ஆண்டு பேரவை கூட்டம் நடந்தது. இதற்கு சங்க தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். பழனி கிளை துணை தலைவர் மாரியப்பன் அனைவரையும் வரவேற்றார். செயலாளர் கணேசன், பொருளாளர் ராணி ஆகியோர் ஆண்டறிக்கை மற்றும் வரவு-செலவு கணக்குகளை வாசித்தனர். சம்மேளன தலைவர் பாலசுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், முன்கள பணியாளர்களுக்கு அரசு அறிவித்த கொரோனா ஊக்கத்தொகை ரூ.15 ஆயிரத்தை உடனடியாக வழங்க வேண்டும். ஓ.எச்.டி. ஆபரேட்டர்களுக்கு அரசாணையில் தெரிவித்தபடி ரூ.1,400 சம்பள உயர்வு வழங்க வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் நேரடியாக சம்பளம் வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு 2 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும். திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரத்தில் மக்கள் தொகைக்கு ஏற்ப கூடுதல் ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
மேலும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் (செப்டம்பர்) 13-ந்தேதி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் முற்றுகை போராட்டம் நடத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதில் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.



Next Story