ஏரல் அருகே 49 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்
49 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்
தூத்துக்குடி:
ஏரல் அருகே சிவில் சப்ளை பறக்கும்படை தாசில்தார் தலைமையில் 49 மூட்டை ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
பறக்கும்படையினர் சோதனை
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள சிறுத்தொண்டநல்லூர் பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மாவட்ட சிவில் சப்ளை பறக்கும்படை தாசில்தார் ஞானராஜ் தலைமையில் வருவாய் ஆய்வாளர் கருப்பசாமி, குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன், போலீசார் சோமன், கண்ணன் உள்ளிட்டோர் அங்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
ரேஷன் அரிசி பறிமுதல்
அப்போது சிறுத்தொண்டநல்லூர் வாய்க்கால் பாலம் அருகே ஹரிஓம் சங்கரன் என்பவரது இடத்தில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 49 மூட்டை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். அதனை குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லைநாகராஜனிடம் தாசில்தார் ஞானராஜ் ஒப்படைத்தார். இது தொடர்பாக அந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story