வெவ்வேறு சம்பவங்களில் மாணவி உள்பட 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை
வெவ்வேறு சம்பவங்களில் மாணவி உள்பட 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
வேடசந்தூர்:
வேடசந்தூர் அருகே உள்ள சேணன்கோட்டையை சேர்ந்த ராஜேஷ் மகள் லோகபிரியா (வயது 16). இவர் வேடசந்தூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவரது பெற்றோர் இறந்துவிட்டனர். இதனால் தனது பாட்டி குப்பாத்தாள் பாதுகாப்பில் வளர்ந்து வந்தார். இந்தநிலையில் லோகபிரியா கடந்த 24-ந்தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்தநிலையில் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் இரவு லோகபிரியா பரிதாபமாக இறந்தார். இது குறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லோகபிரியா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபோல திண்டுக்கல் மாலப்பட்டி அருகே உள்ள பாத்திமாநகரை சேர்ந்தவர் தமிழரசன் (வயது 23). இவர் மதுகுடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரை பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த தமிழரசன் நேற்று அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்கணேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story