மணல் அள்ளிய 2 பேர் கைது


மணல் அள்ளிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 29 Aug 2021 8:52 PM IST (Updated: 29 Aug 2021 8:52 PM IST)
t-max-icont-min-icon

மங்களக்குடி அருகே மணல் அள்ளிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தொண்டி, 
மங்களக்குடி அருகே உள்ள கடம்பூர் கிராமத்தில் திருவா டானை தாசில்தார் செந்தில்வேல் முருகன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், கடம்பூர் குரூப் கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார் மற்றும் வருவாய்த்துறையினர், போலீசார் விருசுழிஆற்றில் மணல் திருட்டை தடுக்க அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அரசு அனுமதியின்றி மணல் அள்ளப்படுவது தெரியவந்தது.அதனை தொடர்ந்து மணல் திருட்டில் ஈடுபட்ட ஒரு டிப்பர் லாரி மற்றும் ஒரு ஜே.சி.பி.எந்திரம் ஆகிய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு திருவாடானை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. சம்பவத்தில் ஈடுபட்ட டிப்பர் லாரி டிரைவர் மேல்பனையூர் கோபால், ஜே.சி.பி. டிரைவர் வரவணி கிராமத்தை சேர்ந்த தர்மராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Next Story