ஆறுமுகநேரி அருகே காட்டில் அழுகிய நிலையில் ஆண் பிணம்


ஆறுமுகநேரி அருகே காட்டில் அழுகிய நிலையில் ஆண் பிணம்
x
தினத்தந்தி 29 Aug 2021 8:57 PM IST (Updated: 29 Aug 2021 8:57 PM IST)
t-max-icont-min-icon

காட்டில் அழுகிய நிலையில் ஆண் பிணம்

ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி காயல்பட்டினம் பைபாஸ் ரோட்டில் உள்ள சுடுகாட்டின் அருகே சீமை உடை மரம் கிளையில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் பிணம் ஒன்று இருந்துள்ளது.
இதுதொடர்பாக காயல்பட்டினம் தென்பாகம் கிராம நிர்வாக அலுவலர் நாகர்ஜூன் ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து ஆறுமுகநேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் நாராயணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது காட்டுப்பகுதிக்குள் முள் மரத்தில் சட்டை இன்றி தனது சாரத்தை கிழித்து, அதில் ஒன்றால் உடை மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் ஆண் பிணம் கிடந்துள்ளது. உடல் தூக்கில் மாட்டி 5 நாட்களுக்கு மேல் ஆகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் உடல் அழுகிய நிலையில் இருந்ததால் பிணத்தை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஐயப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story