புதுச்சேரியில் கொரோனாவுக்கு 2 பேர் பலி
புதுச்சேரியில் புதிதாக 96 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 2 பேர தொற்றுக்கு பலியாகினர்.
புதுச்சேரி, ஆக.
புதுச்சேரியில் புதிதாக 96 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 2 பேர தொற்றுக்கு பலியாகினர்.
96 பேருக்கு கொரோனா
புதுச்சேரியில் நேற்று காலை 10 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 950 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதிதாக 96 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
புதுவையில் 65 பேரும், காரைக்காலில் 18 பேரும், மாகியில் 153 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். புதுவையில் 157 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 535 பேர் வீடுகளில் தனிமை படுத்தப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். அதாவது புதுவையில் 692 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 100 பேர் குணமடைந்தனர்.
2 பேர் பலி
புதுவை மாநிலத்தில் ஒட்டு மொத்தமாக இதுவரை 16 லட்சத்து 32 ஆயிரத்து 991 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 1 லட்சத்து 23 ஆயிரத்து 394 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 890 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
நேற்று முன்தினம் புதுவையில் 2 பேர் உயிரிழந்தனர். புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அரியாங்குப்பத்தை சேர்ந்த 61 வயது மூதாட்டியும், ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோவிந்தசாலையை சேர்ந்த 65 வயது முதியவரும் பலியாகி உள்ளனர்.
புதுவையில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,812 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 1.47 சதவீதமாகவும், குணமடைவோர் எண்ணிக்கை 97.97 சதவீதமாகவும் உள்ளது.
Related Tags :
Next Story