சோளிங்கர் நகராட்சியில் சோமசமுத்திரம் ஊராட்சியை சேர்க்க எதிர்ப்பு.


சோளிங்கர் நகராட்சியில் சோமசமுத்திரம் ஊராட்சியை சேர்க்க எதிர்ப்பு.
x
தினத்தந்தி 29 Aug 2021 9:23 PM IST (Updated: 29 Aug 2021 9:23 PM IST)
t-max-icont-min-icon

சோளிங்கர் நகராட்சியில் சோமசமுத்திரம் ஊராட்சியை சேர்க்கக் கூடாது, எனக்கோரி 200-க்கும் மேற்பட்ட பெண்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சோளிங்கர்

சோளிங்கர் நகராட்சியில் சோமசமுத்திரம் ஊராட்சியை சேர்க்கக் கூடாது, எனக்கோரி 200-க்கும் மேற்பட்ட பெண்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேர்க்கக்கூடாது

சோளிங்கர் பேரூராட்சியை தமிழக அரசு நகராட்சியாக அறிவித்தது. சோளிங்கரில் தற்போது 18 வார்டுகள் உள்ளன. நகராட்சிக்கு 22 அல்லது 24 வார்டுகள் இருக்கு வேண்டும் எனத் தெரிகிறது. இதனால் கூடுதலாக வார்டுகள் சேர்க்க அரசு அருகில் உள்ள வளர்ச்சியடைந்த ஊராட்சிகளை சேர்க்க முடிவு செய்து, சோமசமுத்திரம், பாண்டியநல்லூர், புலிவலம், கரிக்கல் ஆகிய ஊராட்சியில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இந்தநிலையில் சோளிங்கரை அடுத்த சோமசமுத்திரம் கிராம மக்கள் தங்கள் ஊராட்சியைச் சோளிங்கர் நகராட்சியில் சேர்க்கக்கூடாது எனக்கோரி 200-க்கும்‌ மேற்பட்ட பெண்கள் திரண்டு வந்து அந்தக் கிராமத்திய நேற்று திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பெண்கள் கூறியதாவது:-

போதிய வருமானம் இல்லை

எங்கள் ஊராட்சி மாவட்டத்தின் முதல் ஊராட்சி. ஊராட்சியில் சிறு விவசாயிகள், விவசாய கூலிகள் பலர் உள்ளனர். 100 நாள் வேலை மூலமாக கிடைக்கும் வருமானத்தை வைத்து தான் நாங்கள் குடும்பத்தை நடத்தி வருகிறோம். 100 நாள் வேலை தான் எங்களின் வாழ்வாதாரமாக உள்ளது. எங்களின் குழந்தைகளை கடன் வாங்கித்தான் கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறோம். 

நகராட்சி நிர்வாகம் விதிக்கும் வரிகளை கட்டும் அளவுக்கு எங்களுக்கு போதிய வருமானம் இல்லை. ஊராட்சி, வளர்ச்சி இல்லாத ஊராட்சி. மாவட்டத்தின் முதல் ஊராட்சி என்பதாலும் ஊராட்சியாகவே இருக்க வேண்டும், நகராட்சியில் இணைக்க வேண்டாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர். 
மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story