தேனியில் தேசிய விளையாட்டு தின விழா


தேனியில் தேசிய விளையாட்டு தின விழா
x
தினத்தந்தி 29 Aug 2021 3:54 PM GMT (Updated: 2021-08-29T21:24:08+05:30)

தேனியில் தேசிய விளையாட்டு தினவிழா கலெக்டர் தலைமையில் கொண்டாடப்பட்டது.

தேனி:
தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் தேசிய விளையாட்டு தினவிழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கினார். அப்போது கலெக்டர் தலைமையில் விளையாட்டுத்துறை அலுவலர்கள் மற்றும் விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் தேசிய விளையாட்டு தின உறுதிமொழி ஏற்றனர். 
அதைத்தொடர்ந்து விளையாட்டு வீரர்-வீராங்கனைகளுக்கு விளையாட்டு உபகரணங்களை கலெக்டர் வழங்கினார். பின்னர் தேசிய விளையாட்டு தினத்தையொட்டி நடந்த ஆக்கி போட்டியை கலெக்டர் முரளிதரன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் ஆக்கி பேட் மூலம் பந்தை விளாசினார். 
இந்த விழாவில் மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன், மாவட்ட நீச்சல் பயிற்சியாளர் விஜயகுமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Next Story