ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகள் குதூகலம். படகு சவாரி செய்ய நீண்டவரிசை


ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகள் குதூகலம். படகு சவாரி செய்ய நீண்டவரிசை
x
தினத்தந்தி 29 Aug 2021 9:58 PM IST (Updated: 29 Aug 2021 9:58 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா கட்டுப்பாடு காரணமாக ஏலகிரி மலை சுற்றுலா தலம் 4 மாதங்களுக்கு பிறகு நேற்று திறக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர்.

ஜோலார்பேட்டை

கொரோனா கட்டுப்பாடு காரணமாக ஏலகிரி மலை சுற்றுலா தலம் 4 மாதங்களுக்கு பிறகு நேற்று திறக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர்.

ஏலகிரிமலை

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி மலை தமிழகத்தின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏலகிரி மலையில் எந்த காலத்திலும் ஒரே மாதிரியான சீதோஷ்ண நிலை நிலவி வருவதால் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். 

கொரோனா தொற்றின் காரணமாக சுற்றுலா தலங்கள்  மூடப்படது. அதன்படி ஏளக்ரிமலை சுற்றுலாத் தலமும் மூடப்பட்டிருந்தது. இந்த நிலையில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாட்டுடன் கூடிய தளர்வுகளை அறிவித்துள்ளது. அதில் சுற்றுலாத்தலங்களை திறக்க அனுமதி வழங்கியது.

திறப்பு

அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி மலை சுற்றுலா தலத்தை மீண்டும்் திறப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து நேற்று முன்தினம் கலெக்டர் அமர் குஸ்வாஹா ஆய்வு மேற்கொண்டு படகு இல்லம், சிறுவர் பூங்கா மற்றும் இயற்கை பூங்கா ஆகியவற்றை திறக்க உத்தரவிட்டார். 

அதைத்தொடர்ந்து ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் சார்பில் நேற்று ஏலகிரி மலை சுற்றுலா தலம் திறப்பு விழா நடைபெற்றது.
ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. க.தேவராஜி தலைமை தாங்கி படகு இல்லம் மற்றும் சிறுவர் பூங்கா ஆகியவற்றை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அதன் பிறகு சுற்றுலா பயணிகளுக்கு இனிப்புகளை வழங்கி வரவேற்றார்.

பயணிகள் மகிழ்ச்சி

சுற்றுலா பயணிகள் கொரோனா விதிமுறைகள் பின்பற்றி அனைவரும் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளி கடைப்பிடித்து  பங்கேற்றனர். படகுகளில் சவாரி செய்வதற்காக சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று அனுமதிக்கப்பட்டனர்.

முன்னதாக தேவாஜி எம்.எல்.ஏ., ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் விநாயகம் ஆகியோர் படகு சவாரி செய்தனர். மேலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிறுவர் பூங்கா கண்டுகளித்தனர். 4 மாதங்களுக்கு பிறகு மீண்டும் ஏலகிரி மலை சுற்றுலா தலம் திறக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இயற்கைப் பூங்காவில் செயற்கை நீர்வீழ்ச்சி மற்றும் பாடலுக்கு ஏற்றாற் போல் நடனம் ஆடும் நீர் வீழ்ச்சி பராமரிப்பு பணி முழுமையாக மேற்கொள்ளாததால் நேற்று இயற்கை பூங்கா திற்கப்படவில்லை. இதனால் இயற்கை பூங்காவை சுற்றிப் பார்க்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
விழாவில் ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் விநாயகம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் பொன்னுரங்கம், சிவப்பிரகாசம், படகு இல்ல பராமரிப்பு மேற்பார்வையாளர் மகாவேல், ஊராட்சி செயலாளர் சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story