புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு பெருவிழா
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு பெருவிழா பக்தர்கள் இன்றி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
வேளாங்கண்ணி:
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு பெருவிழா பக்தர்கள் இன்றி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
வேளாங்கண்ணி பேராலயம்
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த பேராலய ஆண்டு பெருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 29-ந்தேதி கொடியேற்றுடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறும். இதில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள்.
கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா பக்தர்கள் இன்றி நடந்தது. இந்த ஆண்டும் கொரோனா பரவல் காரணமாக வேளாங்கண்ணி பேராலய திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
ஆண்டு பெருவிழா கொடியேற்றம்
வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டு பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. மாலை 4.30 மணிக்கு கொடி பேராலய வளாகத்துக்குள்ளேயே ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பின்னர் மாலை 5 மணிக்கு தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் கொடியை புனிதம் செய்து ஏற்றி வைத்தார். அப்போது பேராலயம் முழுவதும் அலங்கரிக்கப்பட்ட மின்விளக்குகள் எரியவிடப்பட்டன. தொடர்ந்து மறைமாவட்ட ஆயர் தலைமையில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
விழா நாட்களில் தினமும் காலையில் தமிழ், மராத்தி, கொங்கனி, மலையாளம், ஆங்கிலம், இந்தி, மொழிகளிலும், மாலையில் கன்னடத்திலும் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது.
7-ந்தேதி பெரிய தேர்பவனி
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி வருகிற 7-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) பேராலய வளாகத்துக்்குள்ளேயே நடைபெறுகிறது. 8-ந்தேதி மாதா பிறந்த நாள் விழாவும், மாலையில் கொடியிறக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும்.
கொடியேற்று விழாவில் நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், வேளாங்கண்ணி முன்னாள் பேரூராட்சி தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story