சிவசேனா கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சிவசேனா கட்சியினர் ஆர்ப்பாட்டம்
உடன்குடி:
உடன்குடி பஜார் அண்ணா திடலில் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிவசேனா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேகதாது அணை விவகாரத்தில் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் செயல்படும் கர்நாடகா அரசை கண்டித்தும், தமிழகத்தில் கோவில்களில் சாமி தரிசனம் செய்ய வாரத்தில் 3 நாட்கள் தடை விதிப்பு மற்றும் இந்துக்கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்களை பிற மதத்தினர் ஆக்கிரமித்திருப்பதை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிவசேனா கட்சியின் உடன்குடி ஒன்றிய தலைவர் விவேகானந்தன் தலைமை தாங்கினார். நகர அமைப்பாளர் மணிகண்டராஜன், இந்து ஆர்வலர் வாசுபாலன், நிர்வாகிகள் சரவணன், சன்னாசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை வலியுறுத்தி சிவசேனாவின் மாநில துணைத்தலைவர் சசிகுமார், தென்மண்டல அமைப்பு செயலர் கோமதிராஜ் ஆகியோர் பேசினார்கள்.
Related Tags :
Next Story