புதுப்பேட்டை அருகே பால் வியாபாரி வீட்டில் ரூ.3 லட்சம் நகை-பணம் கொள்ளை


புதுப்பேட்டை அருகே பால் வியாபாரி வீட்டில் ரூ.3 லட்சம் நகை-பணம் கொள்ளை
x
தினத்தந்தி 29 Aug 2021 4:43 PM GMT (Updated: 2021-08-29T22:13:13+05:30)

புதுப்பேட்டை அருகே பால் வியாபாரி வீட்டில் ரூ.3 லட்சம் நகை-பணம் கொள்ளை போனது.

புதுப்பேட்டை, 

புதுப்பேட்டை அருகே உள்ள கொக்குப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் வரதராஜன்(வயது 47). பால் வியாபாரி.  இவர் நேற்று வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வெளியில் சென்றிருந்தார். 

பின்னர் மாலையில் வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவுகள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.  உள்ளே சென்று பார்த்தபோது பீரோவின் கதவுகள் திறந்து கிடந்தன. அதில் இருந்த 4 பவுன் நகைகள், 2 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.70 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர். 

இதன் மதிப்பு ரூ.3½ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story