ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒருவர் பலி


ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒருவர் பலி
x
தினத்தந்தி 29 Aug 2021 4:55 PM GMT (Updated: 2021-08-29T22:25:08+05:30)

கொரோனாவுக்கு ஒருவர் பலி

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 11 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் 155 பேர் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று கொரோனாவுக்கு ஒருவர் பலியானார்.
மாவட்டம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் முகாம்களில் முதல் தவணை கொரோனா தடுப்பூசி 5,193 பேருக்கும், 2-வது தவணை தடுப்பூசி 1,228 பேருக்கும் போடப்பட்டது.


Next Story