கார்-மொபட் மோதல்; தொழிலாளி பலி


கார்-மொபட் மோதல்; தொழிலாளி பலி
x
தினத்தந்தி 29 Aug 2021 4:57 PM GMT (Updated: 2021-08-29T22:27:05+05:30)

தேவதானப்பட்டி அருகே மொபட் மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார்.

தேவதானப்பட்டி:
தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டி பகவதிநகரை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 50). கூலித்தொழிலாளி. 
இவர் தனது உறவினரை பார்ப்பதற்காக நேற்று இரவு மொபட்டில் தேவதானப்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். பெரியகுளம்-வத்தலக்குண்டு சாலையில் சாத்தாகோவில்பட்டி பிரிவு அருகே அவர் வந்தபோது, பின்னால் வந்த கார் ஒன்று மொபட் மீது மோதியது. 
இதில் மொபட்டில் இருந்து தூக்கிவீசப்பட்ட முத்துசாமி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story