குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா?


குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா?
x
தினத்தந்தி 29 Aug 2021 10:29 PM IST (Updated: 29 Aug 2021 10:30 PM IST)
t-max-icont-min-icon

செம்பக்கொல்லியில் குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

பந்தலூர்,

செம்பக்கொல்லியில் குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

தார்சாலையாக மாற்றம்

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட கொளப்பள்ளி அரசு தேயிலை தோட்ட(ரேஞ்சு-3) பகுதியில் இருந்து செம்பக்கொல்லிக்கு தார்சாலை செல்கிறது. இந்த சாலையை செம்பக்கொல்லி மட்டுமின்றி சாமியார் மலையடிவார லைன்ஸ் உள்பட பல்வேறு பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆரம்பத்தில் மண்சாலையாக இருந்தததை மக்களின் கோரிக்கையை ஏற்று கூடலூர் ஒன்றிய அதிகாரிகள் தார்சாலையாக மாற்றினர். ஆனால் சாலை அமைத்து பல ஆண்டுகள் கடந்துவிட்டது. இதனால் அந்த சாலைய பழுதடைய தொடங்கிவிட்டது.

தவறி விழுந்து காயம்

தற்போது கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. அந்த சாலையில் வாகனங்கள் செல்லும்போது, திடீரென பழுதடைந்து நின்று விடுகிறது. இதனால் கர்ப்பிணிகள், நோயாளிகளை அவசர சிகிச்சைக்காக வாகனங்களில் அழைத்து செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. 
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

செம்பக்கொல்லிக்கு செல்லும் சாலையை மழைக்காலத்தில் பயன்படுத்த முடிவது இல்லை. அதில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தவறி விழுந்து காயம் அடையும் நிலை தொடர்கிறது. 

நடவடிக்கை இல்லை

இது மட்டுமின்றி பிற வாகனங்கள் பழுதடைந்து நின்று விடுகின்றன. இதனால் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகிறோம். மேலும் நடந்து செல்லும்போது காட்டுயானை உள்ளிட்ட வனவிலங்குகள் துரத்தினால் கூட வேகமாக தப்பி ஓட முடிவது இல்லை. அந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தோம். 

ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இனிமேலாவது சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story