ஓசூரில் தனியார் நிறுவன அதிகாரியிடம் ரூ.1½ லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை


ஓசூரில் தனியார் நிறுவன அதிகாரியிடம் ரூ.1½ லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 29 Aug 2021 5:00 PM GMT (Updated: 2021-08-29T22:32:38+05:30)

ஓசூரில் தனியார் நிறுவன அதிகாரியிடம் ரூ.1½ லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கிருஷ்ணகிரி,

விழுப்புரம் மாவட்டம் மேல் மலையனூர் பக்கமுள்ள கரடிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 42). இவர் ஓசூரில் பத்தலப்பள்ளி மார்க்கெட் அருகில் தனியார் லேஅவுட்டில் தங்கி உள்ளார். மேலும் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் நிர்வாக மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.
சம்பவத்தன்று இவரது செல்போன் எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) வந்தது. அதில் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் வேலை உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இதை நம்பி சீனிவாசன் அந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசினார். அதற்கு எதிர் முனையில் பேசிய நபர் வேலை உள்ளது. அதற்காக ரூ.1 லட்சத்து 53 ஆயிரத்து 500 நடைமுறை பணிகளுக்காக (புராசசிங் பீஸ்) கட்ட வேண்டும் என கூறினார். 

போலீசார் விசாரணை

அதை நம்பிய சீனிவாசன் பணத்தை அந்த நபரின் வங்கி கணக்கிற்கு செலுத்தினார். ஆனால் அந்த நபர் ஏமாற்றி சென்று விட்டார். இந்த மோசடி குறித்து சீனிவாசன் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story