பணம், நகை மோசடியில் வாலிபர் கைது


பணம், நகை மோசடியில் வாலிபர் கைது
x
தினத்தந்தி 29 Aug 2021 11:11 PM IST (Updated: 29 Aug 2021 11:11 PM IST)
t-max-icont-min-icon

காரைக்குடியில் பணம், நகை மோசடி தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

காரைக்குடி, 
காரைக்குடியில் பணம், நகை மோசடி தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
7 பவுன் நகை
காரைக்குடி கழனிவாசல் சிவானந்தா நகரைச் சேர்ந்த ரவிமுருகன் மகன் சங்கர் (வயது34). இவர் காரைக்குடி தனியார் நிதி நிறுவனத்தில் உதவி மேலாளராக பணியாற்றி உள்ளார். இதையடுத்து தனது உறவினரான  கணேசன் (62) என்பவரிடம் தனது நிறுவனத்தில் தன்னுடைய இலக்கை அடைய 7பவுன் தங்க நகை வேண்டும் என்று கேட்டுள்ளார். இதையடுத்து கடந்த 2019-ம் ஆண்டு 7 பவுன் நகையை அவரிடம் கொடுத்து விட்டு பின்னர் கேட்டபோது கொடுக்க வில்லையாம். 
இதுகுறித்து கணேசன் காரைக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் புகார் கொடுத்து அதற்கு சரிவர சங்கர் ஆஜராகததால் இதுகுறித்து சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் தெரிவித்துள்ளார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின் பேரில் காரைக்குடி வடக்கு போலீசார் சங்கரை கைது செய்து போலீஸ் நிலையத்தில் விசாரணை நடத்தி உள்ளனர். 
கைது
விசாரணையில் சங்கர் பல்வேறு நபர்களிடம் இதுபோன்று பண மோசடி செய்தும், ஏல நகைகளை குறைந்த விலைக்கு வாங்கி தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக தெரிய வந்தது. இதையடுத்து சங்கரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் போலீஸ் நிலையத்தில் வந்து குவிந்தனர். மேலும் அவர்களிடம் போலீசார் இதுகுறித்து புகார் தெரிவிக்க கேட்டனர். ஆனால் அவர்கள் புகார் ஏதும் கொடுக்காமல் திரும்பி சென்றனர். இந்தநிலையில் கணேசனிடம் ரூ.15½ லட்சம் வரை மோசடி செய்ததாக சங்கரை காரைக்குடி வடக்கு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story