வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 4 பேர் கைது
வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
தேவகோட்டை,
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தேனம்மை ஊரணி பகுதியை சேர்ந்தவர் முகமது அபுபக்கர் (வயது 22). இவருக்கு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது வாளை கொண்டு கேக் வெட்டி தனது நண்பர்களுக்கு விருந்து அளித்தார். அவருக்கு உறுதுணையாக இருந்த அய்யப்பன் (32), சூர்யா (19), முகம்மதுயாசிக் (21) ஆகியோர் இருந்துள்ளனர். இந்த செயலை சமூக ஊடகங்கள் மற்றும் வாட்ஸ்-அப் மூலம் பரப்பினர். இது வைரலானது. இதைத்தொடர்ந்து பொது மக்களிடையே அச்ச நிலை ஏற்பட்டது. இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சிவகங்கை மாவட்ட காவல் கண் காணிப்பாளர் செந்தில்குமாரி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து உதையாச்சி கிராம நிர்வாக அதிகாரி சந்திரசேகர் தேவகோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித் தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து முகம்மது அபுபக்கர், அவருடைய நண்பர்கள் அய்யப்பன், சூர்யா, முகம்மது யாசிக் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story