போலீஸ் ஏட்டு பணியிட மாற்றம்


போலீஸ் ஏட்டு பணியிட மாற்றம்
x
தினத்தந்தி 29 Aug 2021 11:23 PM IST (Updated: 29 Aug 2021 11:23 PM IST)
t-max-icont-min-icon

இளம்பெண்களுக்கு பாலியல் தொல்லை வழக்கு தொடர்பாக போலீஸ் ஏட்டு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

காரைக்குடி,
 அறந்தாங்கியை சேர்ந்தவர் ராஜா. இவர் விழாக்களில் பங்கேற்கும் நடனக்குழு ஏற்பாடு செய்து கொடுக்கும் புரோக்கர் வேலை செய்து வந்தார். இவரிடம் வேலை செய்த இளம்பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கடந்த சில தினங்களுக்கு முன்பு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் ராஜாவிற்கு ஆதரவாக செயல்பட்டதாக சாக்கோட்டை போலீஸ் நிலையத்தில் தலைமை ஏட்டாக பணியாற்றிய மாயவதன் என்பவர் மீது புகார் எழுந்தது. இதையடுத்து அவர் மீது துறைரீதியாக சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் நடவடிக்கை எடுத்து அவரை மானாமதுரை சிப்காட் போலீஸ் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார்.

Next Story