தரகம்பட்டி அருகே குளத்து மண்ணை செங்கல் சூளைக்கு கடத்த முயன்ற 4 பேர் கைது


தரகம்பட்டி அருகே குளத்து மண்ணை செங்கல் சூளைக்கு கடத்த முயன்ற 4 பேர் கைது
x
தினத்தந்தி 30 Aug 2021 12:07 AM IST (Updated: 30 Aug 2021 12:07 AM IST)
t-max-icont-min-icon

தரகம்பட்டி அருகே குளத்து மண்ணை செங்கல் சூளைக்கு கடத்த முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

வெள்ளியணை, 
ரகசிய தகவல்
தரகம்பட்டி அருகே ஆதனூர் முனியப்பன் கோவில் பகுதியில் உள்ள நாச்சி குளத்தில் பொக்லைன் எந்திரம் உதவியுடன் குளத்து மண்ணை வெட்டி எடுத்து டிப்பர் லாரிகளில் சிலர் நிரப்பிக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சிந்தாமணிபட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் மண்ணை அள்ளிக்கொண்டிருந்த 4 பேரை மடக்கி பிடித்தனர்.
4 பேர் கைது
விசாரணையில் அவர்கள் கடவூர் தாலுகா வெள்ளபட்டியை சேர்ந்த மாரிமுத்து (வயது 24), கஸ்தூரி குரும்பபட்டியை சேர்ந்த சுரேஷ் (36), சேலத்தை சேர்ந்த தினேஷ் (19), ஜெயங்கொண்டம் பிச்சனூரை சேர்ந்த கலைச்செல்வன் (36) என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் குளத்து மண்ணை வெட்டி எடுத்து தனியார் செங்கல் சூளைக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 பொக்லைன் எந்திரங்கள், 4 டிப்பர் லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story