சரக்கு வேன் கவிழ்ந்து 5 பேர் காயம்


சரக்கு வேன் கவிழ்ந்து 5 பேர் காயம்
x
தினத்தந்தி 30 Aug 2021 12:10 AM IST (Updated: 30 Aug 2021 12:10 AM IST)
t-max-icont-min-icon

சரக்கு வேன் கவிழ்ந்து 5 பேர் காயம் அடைந்தனர்.

குளித்தலை,
திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை பகுதியில் மரம் வெட்டுவதற்காக குளித்தலை பகுதியை சேர்ந்த சிலர் சரக்கு வேனில் நேற்று சென்று கொண்டிருந்தனர். குளித்தலை அருகே உள்ள அய்யர்மலை-கணக்கப்பிள்ளை சாலையில் சென்று கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன் தாறுமாறாக சென்று சாலையோரம் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் சரக்கு வேனில் பயணம் செய்த குளித்தலை அருகே உள்ள சின்னைம்பாளையம் பகுதியை சேர்ந்த முத்துநாயக்கர் (வயது 45), சின்னமநாயக்கனூர் பகுதியை சேர்ந்த ரத்தனகிரி (37), சசிகலா (27), பெருமாள் (31), குறிக்காரன் பட்டி பகுதியை சேர்ந்த வடிவேல் (30) ஆகியோர் காயமடைந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story