வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 30 Aug 2021 12:23 AM IST (Updated: 30 Aug 2021 12:23 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

நெல்லை:
நெல்லை டவுன் பாட்டப்பத்து பகுதியைச் சேர்ந்தவர் இசக்கி தாஸ் மகன் சுந்தர்ராஜன் (வயது 28). இவர் கொலை முயற்சி, பொதுமக்களை அச்சுறுத்தல் ஆகிய வழக்குகளில் பேட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் சுந்தர்ராஜனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய  நெல்லை மாநகர சட்டம்-ஒழுங்கு போலீஸ் துணை கமிஷனர் சுரேஷ்குமார், டவுன் உட்கோட்ட போலீஸ் உதவி கமிஷனர் (சட்டம்- ஒழுங்கு) விஜயகுமார் ஆகியோர், நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தாமரை கண்ணனுக்கு பரிந்துரை செய்தனர். போலீஸ் கமிஷனர் அதனை ஏற்று, சுந்தர் ராஜனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். 
இதனையடுத்து போலீசார், சுந்தர் ராஜனை குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கான ஆணையை சிறை அதிகாரிகளிடம் வழங்கினர்.

Next Story