திருச்சிற்றம்பலம் அருகே மாயமான முதியவர் ஆற்றில் பிணமாக கிடந்தார் போலீசார் விசாரணை


திருச்சிற்றம்பலம் அருகே மாயமான முதியவர் ஆற்றில் பிணமாக கிடந்தார் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 30 Aug 2021 1:00 AM IST (Updated: 30 Aug 2021 1:00 AM IST)
t-max-icont-min-icon

திருச்சிற்றம்பலம் அருகே மாயமான முதியவர் ஒருவர் ஆற்றில் பிணமாக கிடந்தார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருச்சிற்றம்பலம்:-

திருச்சிற்றம்பலம் அருகே மாயமான முதியவர் ஒருவர் ஆற்றில் பிணமாக கிடந்தார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

போலீசில் புகார்

தஞ்சை டவுன் தொம்பன் குடிசையை சேர்ந்தவர் சரவணகுமார். இவர் தனது தந்தையை காணவில்லை என தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்தில் கடந்த 4 தினங்களுக்கு முன்பு புகார் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நெடுவாசல் கல்லணைக்கால்வாய் பிரிவு வாய்க்காலில் உடல் அழுகிய நிலையில் ஒரு ஆண் பிணம் கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருச்சிற்றம்பலம் போலீசார் தஞ்சை கிழக்கு போலீசார் மூலம் சரவணகுமாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் சரவணகுமார் அங்கு சென்று பிணமாக கிடந்தவர் தனது தந்தை சக்தி சுப்பிரமணியம் (வயது75) என்பதை உறுதி செய்தார். 

போலீசார் விசாரணை

அதனை தொடர்ந்து திருச்சிற்றம்பலம் போலீசார் சக்தி சுப்பிரமணியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின்னர், அவரது உடல் உறவினர்கள் முன்னிலையில் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. 
இறந்தத சக்தி சுப்பிரமணியன் உடல்நலமின்றி இருந்ததாகவும் ஆற்றில் குளிப்பதற்காக இறங்கியபோது தவறி விழுந்து இறந்து இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story