பூட்டிய வீட்டுக்குள் பிணமாக கிடந்த மருத்துவ ஊழியரால் பரபரப்பு


பூட்டிய வீட்டுக்குள் பிணமாக கிடந்த மருத்துவ ஊழியரால் பரபரப்பு
x
தினத்தந்தி 30 Aug 2021 1:38 AM IST (Updated: 30 Aug 2021 1:38 AM IST)
t-max-icont-min-icon

பூட்டிய வீட்டுக்குள் பிணமாக கிடந்த மருத்துவ ஊழியரால் பரபரப்பு ஏற்பட்டது

திருச்சி
திருச்சி வரகனேரி பெரியார்நகர் குழுமிக்கரை பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணனின் மகன் நவநீதகிருஷ்ணன் (வயது 39). திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் உதவியாளராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.வீட்டில் தனியாக வசித்து வந்த நவநீதகிருஷ்ணன் தினமும் காலையில் எழுந்து வீட்டின் அருகில் உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிப்பது வழக்கம். ஆனால் நேற்று காலையில் அவர் தண்ணீர் பிடிக்க வரவில்லை.
பூட்டிய வீட்டுக்குள் பிணம்
அக்கம்பக்கத்தினர் அவருடைய வீட்டுக்கு சென்றபோது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் அவர்கள் வீட்டின் கதவை தட்டினார்கள். ஆனால் அவர் கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் அவருடைய சகோதரருக்கு தகவல் கொடுத்தனர்.
அவர் பால்கனி வழியாக ஏறி உள்ளே சென்று பார்த்தபோது பூட்டிய வீட்டுக்குள் நவநீதகிருஷ்ணன் பிணமாக கிடந்தார். அவருடைய வாயில் இருந்து ரத்தம் வடிந்து இருந்தது. அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்ததால் இதுபற்றி காந்தி மார்க்கெட் போலீஸ் நிலையத்துக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர்.
போலீசார் விசாரணை
உடனே சம்பவ இடத்துக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுசிலா தலைமையிலான போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் காந்தி மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில் அவர் உடல்நலக்குறைவால் இறந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்பே, அவர் எப்படி இறந்தார்? என்பது தெரிய வரும். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



Next Story