மோட்டார்சைக்கிள் விபத்தில் எலக்ட்ரீசியன் பலி


மோட்டார்சைக்கிள் விபத்தில் எலக்ட்ரீசியன் பலி
x
தினத்தந்தி 29 Aug 2021 8:11 PM GMT (Updated: 2021-08-30T01:41:41+05:30)

சுரண்டை அருகே மோட்டார்சைக்கிள் விபத்தில் எலக்ட்ரீசியன் பலியானார்.

சுரண்டை:
சுரண்டை அருகே உள்ள வென்றிலிங்கபுரத்தைச் சேர்ந்த வென்றிலிங்கம் மகன் கலைச்செல்வன் (வயது 23). எலக்ட்ரீசியன். இவர் நேற்று முன்தினம் இரவு தனக்கு சொந்தமான மோட்டார்சைக்கிளில் சேர்ந்தமரத்தில் இருந்து குலசேகரமங்கலம் வழியாக வென்றிலிங்கபுரம் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது ஒரு திருப்பத்தில் திரும்பும்போது நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதனால் தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சேர்ந்தமரம் போலீசார், கலைச்செல்வன் உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து சேர்ந்தமரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story